மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேச மக்கள் குடி நீர் பிரச்சினையினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.
வவுணதீவு பிரதேசத்தில் தங்கள் பகுதி உயர்ந்த பகுதி என்பதன் காரணமாக பல காலமாக இந்த குடிநீர் பிரச்சியை எதிர்கொண்டுவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீர் தட்டுப்பாடான காலப்பகுதியில் ஐந்து கிலோமீற்றர் பயணம்செய்து மணல்பிட்டி என்னும் இடத்திலேயே குடிநீரைப்பெற்றுவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் நீரைப்பெற்றுக்கொள்வதற்காக வயல் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள நீரினையே இதுவரை காலமும் பயன்படுத்திவருவதாகவும் அந்த நீரைப்பயன்படுத்துவதன் காரணமாக தமது குழந்தைகள் அடிக்கடி நோய்களுக்கு உட்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வயல் செய்கை காலத்தில் வயல்களுக்கு இரசாயணங்கள் பயன்படுத்துவதன் காரணமாகவும் தாங்கள் நிரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் வவுணதீவில் குடிநீர் வழங்கி அமைக்கப்பட்டு உன்னிச்சைக்குளத்தில் இருந்து நீரைப்பெற்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் காஞ்சிரங்குடா பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் வவுணதீவு பிரதேசத்தில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையிலும் குடி நீர் பிரச்சினையை கடுமையாக எதிர்நோக்கும் தமது பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.