ஊறணி சரஸ்வதிக்கும் மஞ்சந்தொடுவாய் பாரதிக்கு இடையிலான போட்டியில் பாரதி சம்பியன்(திருத்தம்)

(ரவிக்குமார்)

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கும் மட்டக்களப்பு, ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்துக்கும் இடையில் நடைபெற்ற கரம் பிக் மெற்சில்(BIG MATCH) மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் வெற்றிபெற்றுள்ளது.


ஊறணி சரஸ்வதி வித்தியால விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர்; எம்.யோகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இரு பாடசாலைகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்த ஆண்டுக்கானகரம் போட்டியில் சம்பியனாக மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவரும் இந்த கரம்போட்டியில் கடந்த ஆண்டு ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

வலய மட்டத்தில் நடாத்தப்பட்டுவரும் கரம் சுற்றுப்போட்டியில மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய 19வயதுக்குட்பட்ட அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 15வயதுக்குட்பட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.