மக்களுக்கான சேவையாற்றுவதற்கு ஆளும் கட்சியில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.எதிர்க்கட்சியிலும் இருந்து பல சேவைகளையாற்றலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் உரிமையினை சரிவர பயன்படுத்தினால் பல சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் சிறுவர் பூங்கா இன்று வியாழக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
இன்று காலை பெரியகல்லாறு ஆதார வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் எஸ்.ருதேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியின் பயனாக சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் சகல விளையாட்டுகளையும் கொண்டதாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் சிறுவர்கள் பொழுதினைக்கழிக்கும் வகையில் இந்த சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் ஆலயங்களின் தலைவர்கள்,வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
1996ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டது முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சேவைகளையாற்றியுள்ளேன்.அனைத்து சேவைகளும் நான் எதிர்க்கட்சியில் இருந்தே செய்துவந்தேன்.
எமது உரிமைகளை நாங்கள் கோரிவந்த அதேவேளையில் எமக்குள்ள பாராளுமன்ற உரிமையை பயன்படுத்தி மக்களுக் சேவையாற்றிவந்துள்ளேன்.என்றார்.