வவுணதீவு, காஞ்சிரங்குடா தமிழரசுக்கட்சியின் கிளைக்கூட்டம்

தமிழரசுக்கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தும் செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் காஞ்சிரங்குடா பிரதேசத்தின் தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் காஞ்சிரங்குடா சிவன் ஆலய முன்றிலில் இன்று நடைபெற்றது.

காஞ்சிரங்குடா பிரதேச தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஆலய முன்றிலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா,தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி தலைவர் க.கோபாலபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் ஆலயத்திற்கு சென்று அதிதிகள் வழிபாடுகளை மேற்கொண்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது வவுணதீவு பிரதேசத்தில் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.