கல்லடி சிவானந்தாவில் இராணுவத்தினரின் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வு

நாடளாவிய ரீதியில் சித்திரைப்புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்கு அனைவரும் தயாராகிவருகின்றனர்.

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாட்ட நிகழ்வுகள் களைகட்டிவருகின்றது.

கிழக்கு மாகாண இராணுவ தலைமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமானது.

மட்டக்களப்பு,கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு இன்று காலை கோலாகலமாக ஆரம்பமானது.

தமிழ் சிங்கள மக்களின் வாழ்க்கை முறையினையும் பண்பாடுகள் கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன..

அத்துடன் இன்று காலை மரதன் ஓட்ட நிகழ்வுகள்,சைக்கிள் ஓட்ட நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றதுடன் பல்வேறு போட்டி நிகழ்வுகள்,இசை நிகழ்வுகள்,பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதனைக்கண்டுகளிக்கும் வகையில் பெருமளவான பொதுமக்கள் வந்துசெல்வதை காணமுடிகின்றது.