மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச கிழக்கின் முதல் சிற்றரசியின் கோட்டையும், காசி லிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் திட்டமிட்ட பள்ளிவாயல் மற்றும் குடியேற்றப்படும் நிலையினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொல் பொருள் அகழ்வராய்ச்சி திணைக்களம் அகழ்வராய்ச்சி செய்து இப்பகுதியினை புனித பிரதேசமாக பிரகடனமாக்க வேண்டும் எனவும் நாம் இந்துக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கையினை ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தொடர் உண்ணா விரத அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாம் இந்துக்கள் அமைப்பின் தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாம் இந்துக்கள் அமைப்பினால் அரசாங்க அதிபர் மற்றும் கௌரவ முதலமைச்சர் (கிழக்குமாகாணம்); கிழக்குமாகாண ஆளுநர் ,மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர்,பிரதேச சபை செயலாளர் ,தொல் பொருள் திணைக்களப்பணிப்பாளர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கையளிக்கப்பட்ட மனுவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அம்மனுவில்,
1. உலக புகழ் பெற்ற சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும், காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும், அதன் இடிபாடுகளும், புராதான பொருட்களும் புதையுண்டுள்ள புனித பூமியை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு பலவருடங்களாக எம்மால் கோரப்பட்டுவந்தபோதும் தொல் பொருளியல் திணைக்களஅதிகாரிகளுடன் நாம் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களால் நேரடியாக பார்வை இட்டு பல ஆதாரங்கள் பெறப்பட்டதும் 2014ம் வருடம் நவம்பர் மாதம் நிறுத்திவைக்கப்பட்டகுறித்தபிரதேசத்தின் மீதான நில ஆக்கிரமிப்பு மற்றும் பள்ளிவாயல், திட்டமிட்டகுடியேற்றங்கள் எப்படி 2015 ஜனவரி 8ம் தகதியின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சிக்காக தமிழர்களும் வாக்களித்தநிலையில் ஆரையம்பதிக்கு மட்டும் சர்வாதிகாரஆட்சியா? என்றஅச்சம் எம் தமிழ் மக்களிடம் குடிகொள்கின்றது. அத்தோடு சாட்சியமாக பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன்; நிலத்தின் கீழ் பல புராதான பொருட்கள் உள்ள நிலையில் எப்படி அகழ்வாராய்ச்சி செய்யாது பள்ளிவாயல் மற்றும் வீடுகள் கட்டுவதற்கு அனுமதிகொடுக்கமுடியும் இது சட்டத்திற்கு முரணானது ஆகும்.ஆகவே உடனடியாக இக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி செய்த பின்னர் இப் பிரதேசத்தினை புனித பிரதேசமாக பிரகடணப்படுத்த வேண்டும்
2. மண்முனைப்பற்று பிரதேசத்தில் தமிழர்களும், முஸ்லீம்களும் அன்னியொன்னியமாக வாழ்கின்ற நிலையில் மண்முனைப்பற்றிலுள்ள வீடு வாசல் அற்ற முஸ்லீம் சகோதரர்களுக்கு அரச மற்றும் வெளிநாட்டு நிதிகள் மூலம் வீடுகள் வழங்கப்படுவதனை நாம் வரவேற்கின்றோம்.ஆனால் ஏனைய பிரதேசங்களிலும் ஏனைய மாவட்டங்களிலும் இருந்தும் திட்டமிட்டமுறையில் 100,200 என பெருந்தொகையான குடும்பங்களை குடியேற்றுவது இனபரம்பலையும், இன ஒற்றுமையையும் பாதிக்கும் செயற்பாடாகும். இது சட்டத்தின் முன் தண்டனைக்குரியகுற்றமாகும். அத்துடன் மண்முனைப்பற்றில் காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் ஏழை முஸ்லீம் சகோதரர்கள் அல்லஅரசியல் மற்றும்
பணம் படைத்த செல்வந்தர்களுமாகும். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் கட்டட அனுமதிகள் வழங்கும் போது காணி உரிமையம் மற்றும் காணியின் வரலாறு தொடர்பாக ஆராய்ந்து அனுமதி வழங்குவதற்கு பிரதேசசெயலகம், பிரதேச சபை காணி உத்தியோகத்தர் அடங்கிய குழு நியமிக்கப்பட வேண்டும். அத்தோடு கடந்த காலங்களில் நடந்ததும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுமான காணி அபகரிப்பு மற்றும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு குழு நியமிக்ககப்படவேண்டும்.
மேற்படி எமது மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில அபகரிப்புக்களும் மற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்து உரிய நடவடிக்கைஎடுப்பதற்கும் இவ்வாறான திட்டமிட்ட காணி அபகரிப்பு குடியேற்றங்கள் அரச, தனியார் காணிகள் மீதான அத்துமிறல்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஓர் குழு நியமிக்கப்படவேண்டும்.
3. கோவில்குளம் கிராமத்தின் (செல்வாநகர் கிராமசேவகர் பிரிவில்)பொதுமயானம் பிரதேசசெயலாளர் மற்றும் பிரதேசசiபினால் ஒதுக்கிகொடுக்கப்பட்டபோதும் அப்பிரதேசத்தில் சடலங்கள் அடக்கம் செய்வதற்குகாணப்படும் தடையினைநீக்குவதுடன் குறித்தபகுதியில் நடைபெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்துதல்.
4. பிரதேசசெயலாளர், பிரதேச சபை, காணிஉத்தியோகத்தர், ஊர் தலைவர்கள், சமயத்தலைவர்கள் (தமிழர்,மண்முனைப்பற்று இஸ்லாமியர்கள்) அடங்கிய குழு நியமிக்கப்படவேண்டும் எனவும் அப்போதுதான் குறித்த பிரதேசத்தில் இன முறுகலைத் தடுத்து இன ஐக்கியத்தினைப் பேணுவதுடன் ஆரையம்பதி தமிழர்களின் பூர்வீக நிலங்களையும், ஆவணங்களையும் பாதுகாக்க முடியும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றோம். எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட கட்டுமான பணிகளை தற்காலிகமாக உடன் தடுத்து நிறுத்தி தொல் பொருள் திணைக்களத்தின் அறிக்கையின் பின்னே உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தொடர்ந்தும் ஒரு வார காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.