பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் வகுப்புகளை பகிஸ்கரித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏனைய பிரிவு மாணவர்களும் இதில் பங்குகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
“இது பல்கலைக்கழகமா? பள்ளிக்கூடமா”, “எங்கே?எங்கே?சுற்றுலாக்கான நிதி எங்கே”, “போராட்டம் இது போராட்டம் எமது உரிமைக்கான போராட்டம்”;, “யாருக்கு யாருக்கு இராஜதுரை அரங்கு யாருக்கு” போன்ற சுலோகங்களை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
மூன்றாம் வருட மாணவர்களது கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுகின்றமையும் அது குறித்து நிர்வாகிகள் எவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
நிறுவகத்தில் பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளவர்கள் தங்களது தொழில் கடமைகளை மீறி மாணவர்களிடம் அதிகாரத்தினை பிரயோகிக்கின்றனர்.
அத்துடன் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கானது பரீட்சைக்காலத்தில் வெளிநிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதனால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றோம்.
அரையாண்டு பரீட்சைக்கான நேர அட்டவணைப்படி உரிய நேரத்திற்கு நடைபெறாது பிற்போடப்படுவதுடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதப்போக்கே நிலவிவருகின்றது என தெரிவித்த மாணவர்கள் இது தொடர்பில் கடந்த காலத்தில் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கவனர் ஈர்ப்பு போராட்டத்தில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியமும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.