தமிழர்கள் முன்னேறி சுயகௌரவத்துடன் வாழவேண்டும் -முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்

இப் புது வருடத்தில் தமிழர்களின் நீண்டகாலப் பயணம் வெற்றியடையவும் ஒவ்வொருவரது குடும்பத்திலும் ஏற்படும் மாற்றம் வாழ்வாதார உயர்ச்சி மூலம் சமூக உட்கட்டமைப்பு பணிகளிலும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறி சுய கொளரவத்துடன் தலைநிமிர்ந்து வாழ புதுவருடம் வழிகோலவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள சித்திரை புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிறக்கும் தமிழ் சிங்கள மன்மத புது வருடம் அனைத்து மக்களுக்கும் புகழ் சேர்க்கும் வருடமாக அமைய உளமாறவாழ்த்துகின்றேன்.

பல்வேறு தேவைகளுடனும் கனவுகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் சந்தோஷமும் சுவிட்ஷமும் தலைத்தோங்குவதுடன் வறுமை, நோய் பிணிகள் ,இன ,மத , மொழி ,வர்க்க, பேதங்களை கழைந்து எல்லோரும் சுய கொளரவத்துட்னும், தத்தமது பொருளாதார, வலுவாக்கத்துடனும் தலை நிமிர்வான சமூகமாக வாழ்வதற்க்கும் கல்வி, கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் மேலோங்கப் பெற்றும் அரசியல் அதிகார ரீதியாக பயனடையும்,

சமூகமாகவும் கிழக்கு மாகாண தமழ் பேசும் மக்கள்  தடம் பதிக்கவும் மன்மத, வருடம் கால் கோலிட  வாழ்த்துவதுடன் காலம் பொன்னானது பல இன்னல்களை அனுபவித்த எம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஜனநாயகப்பாதையில் பயணிப்பதற்கு பல தியாகங்களும் அற்பணிப்புகளும் தேவை.

வேடிக்கை பார்ப்பதும் விதண்டாவாதங்களும் வீணான மனக்கசப்பையும் சில வேளைகளில் காதுக்கு இனிமைகளையும் தருமே தவிர நிரந்தர தீர்வாகவோ பசித்த வயிற்றுக்கு புசிக்க உணவாகவோ அமையாது. ஜதார்த்தம் உணராத முயற்சியும், இலக்கு இல்லாத பயணமும் வெற்றிதராது. தமிழர்களின் வாழ்கை மார்தட்டும் அளவிற்கு மாறவேண்டுமானால் ஒற்றுமை தேவை.

அதிகாரமும் பலமும் எல்லோர் கையிலும் கிடைக்காது கிடைத்த வாய்பைப் பயன்படுத்தி சமூக முன்னேற்றத்திற்கு வித்திட ஒன்றிணைப்பு என்பது மிகவும் தேவையானது.

,இந் நிலையினை மாற்றி பிறந்த இப் புது வருடத்தில் தமிழர்களின் நீண்டகாலப் பயணம் வெற்றியடையவும் ஒவ்வொருவரது குடும்பத்திலும் ஏற்படும் மாற்றம் வாழ்வாதார உயர்ச்சி மூலம் சமூக உட்கட்டமைப்பு பணிகளிலும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறி சுய கௌரவத்துடன் தலைநிமிர்ந்து வாழ புதுவருடம் வழிகோல வாழ்த்துகிறேன்.

,