(ரஞ்சன்,லதா)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புத்தாண்டு பொருட்கொள்வனவுக்கு மக்கள் பயணித்துக்கொண்டிருந்த பஸ் குடை சாய்ந்ததில் 32பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.00மணியளவில் வாழைக்காலை பிரதேசத்தில் இருந்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ்சே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தும்பங்கேணி வீதியால் பஸ் வந்துகொண்டிருந்தபோது பஸ்சின் டயரில் காற்று வெளியேறிய நிலையில் தடம்புரண்டு வீதியில் மருங்கில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அதில் 50பேர் பயணம் செய்துள்ளதுடன் அவற்றில் 32பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11பேர் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ள நிலையில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் 14Nபுர் வைத்தியசாலையில்
சிகிச்சைபெற்றுவருவதாகவும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெலகெதர தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.