(லியோன்)
மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற கள்ளியங்காடு அருள்மிகு ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தின் கும்பாபிசேக தின சங்காபிசேக நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் பூஜைகள் நடைபெற்றதுடன் சங்காபிசேக விஞ்ஞாபனம் ஆரம்பமானது.
கடந்த ஆண்டு கும்பாபிசேகம் கண்ட ஆஞ்சநேயர் ஆலயத்தின் கும்பாபிசேகத்தினை குறிக்கும் வகையில் அதன் திதியில் சங்காபிசேகம் நடாத்தப்பட்டது.
108 சங்குகள் அடுக்கப்பட்டு விசேட பூஜைகள்,ஹோம பூஜை நடாத்தப்பட்டதுடன் தீபாராதானை மற்றும் அபிசேகம் என்பன நடைபெற்றது.
இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் கிரியைகள் ஆலயகுரு சிவஸ்ரீ ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் பிரம்மன்தானு வாசுதேவ சிவாச்சாரியரினால் நடாத்தப்பட்டது.