தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்,விவசாயிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

(சுஜி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவு வழங்கலும் விநியோகமும் அமைச்சின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வந்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கலும் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கல் நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்குமாகாணசபையின் விவசாய, கால்நடைஉற்பத்திஅபிவிருத்தி, மீன்பிடி,நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் உணவுவழங்கலும் விநியோகமும் அமைச்சின் அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தலைமையில் சத்துருகொண்டான் விவசாயப் பயிற்சிநிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாணசபையின் விவசாய,கால்நடைஉற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி,நீர்ப்பாசனம், கூட்டுறவுஅபிவிருத்தி மற்றும் உண வுவழங்கலும் விநியோகமும் அமைச்சின் மைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், கிழக்குமாகாசபை உறுப்பினர்  பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் அமைச்சின் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் புதிதா கநியமனம் பெறுவோர் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டு கலாச்சாரநிகழ்வுகள் இடம்பெற்றுசிறப்புரைகள் இடம்பெற்றதுடன் புதிதாகநியமனம் பெறும் உத்தியோகஸ்தர்களுக்கு அதிதிகளால் நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது குறித்த திணைக்களங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் 14பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதுடன் 8 விவசாயிகளுக்கு மா அரைக்கும் இயந்திரங்களும் இரண்டு பாலர் பாடசாலைகளுக்குபால் சேகரிப்பு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.