ஊடகத்துறையில் அரை நூற்றாண்டை பூர்த்திசெய்து கிழக்கிலங்கைங்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பின் முதுபெரும் ஊடகவியலாளர் இளையதம்பி பாக்கியராஜாவை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பாராட்டி கௌரவித்தது.
நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 50 வருடகாலமாக பத்திரிகையாளராகப் பணிபுரியும் இளையதம்பி பாக்கியராஜா, 1964 ஆம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகையில் மண்டூர் நிருபராக பணிபுரிய ஆரம்பித்தவர்.
அன்றுமுதல் பத்திரிகை, வானொலி என பல்வேறு ஊடகங்களிலும் அர்பணிப்புடன் பணியாறிய அவர், இன்றும் சமூக உணர்வுடன் எழுத்துத் துறையில் ஈடுபட்டுவருகின்றார்.
பாக்கியராஜா 1999 ஆம் ஆண்டில் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து அன்று முதல் இன்று வரை பணிபுரிந்து வருகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஈழநாடு ஆகியவற்றிலும் நிருபராகப் பணியாற்றியவர். இதனைவிட, மண்டூர் நலன் விரும்பிகள் ஒன்றியம், மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றிலும் தலைமையேற்று வழிநடத்திவருபவர்.
கனடாவிலிருந்து வெளியிடப்பட்ட ஆதவன் பத்திரிகையின் ஸ்தாபகஆசிரியர், மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலயம், பட்டிருப்பு மகா வித்தியாலயம், கல்முனை பத்திமா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனான இவர், மண்டூர் கலைவாணி சனசமூக நிலையம், பிரயாணிகள் சங்கம், மண்டூர், பிரஜைகள் குழு, மட்டக்களப்பு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணி மன்றம் ஆகியவற்றின் செயலாளராகவும், மண்டூர் 1 ஆம் 2 ஆம், பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது ஊடகப்பணி மேலும் சிறக்க “மட்டுநியுஸ்” இணையம் பிரார்த்திப்பதுடன் தனது வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கின்றது.