மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழiமை இரவு பாம்புதீண்டிய பெண்னொருவர் சிகிச்சை வழங்க தாமதத்தினால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு ஈரளக்குளம் பகுதியில் உள்ள வேரம் என்னும் கிராமத்தில் பாம்புதீண்டிய வன்னச்சாமி செல்வரெட்னம் என்னும் ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
இவரை நேற்று மாலை பாம்பு தீண்டியபோதிலும் குறித்த பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்று இல்லாத நிலை காரணமாக வந்தாறுமூலை,மாவடிவேம்பு வைத்தியசாலைக்கே கொண்டுவரவேண்டிய நிலையிருந்தது.
இந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருவதனால் சந்தனமடு ஆற்றினை கடந்தே வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் உள்ளது.தற்போது அதிகளவு நீர் குறித்த ஆற்றின் ஊடாக செல்வதன் காரணமாக நீண்ட போராட்டத்துக்கு பின்னே பாம்பு தீண்டிய பெண் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் வழியிலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலம் மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.