புதுநகர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையின் முப்பெருவிழா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதுநகர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையின் முப்பெருவிழா நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.


புதுநகர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை அதிபர் சிறிஸ்கந்தராசா மில்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு ஆணையாளர் மு.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த முப்பெருவிழாவில்  சிவதொண்டர் விருது வழங்கல்,பரிசளிப்பு நிகழ்வு, அறஒளி ஆய்வு நூல் வெளியீடு என்பன நடைபெற்றன.

ஐந்து கிராமங்களின் பண்பாடுகள்,வரலாறுகள்,அங்கு அமைந்துள்ள ஆலயங்களில் வரலாறுகள் மற்றும் பண்பாடுகள்,கலை கலாசாரங்களை தாங்கியவதாறு அறஒளி ஆய்வு நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.

அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.