சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்ளுக்கான பயிற்சி செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தங்களது வியாபார நடவடிக்கைகளை பொறுப்புள்ள வியாபார கொண்டுசெல்லும் வகையில் முழுநாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு கோப்பின் விடுதியில் நடாத்தப்பட்டது.


இலங்கை நிர்வாகஸ்தர் ஒன்றியமும் சர்வதேச நிதி நிறுவனமும் ஆகியவற்றின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் இந்த செயலமர்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கே.குகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை நிர்வாகஸ்தர் ஒன்றியத்தின் சிரேஸ்ட உபதலைவர் திருமதி செரோஸ் கூரே,பிரதம நிறைவேற்று அதிகாரி டிலானி பெரேரா,சர்வதேச நிதி நிறுவனத்தின் விதிவிட முகாமையாளர் அடம் ஸக்,தேசிய திட்டமுகாமையாளர் கிரகம் ஹாரிஸ்,வளவாளர் திருமதிலோபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

நேற்று சனிக்கிழமை முழு நேர செயலமர்வாக நடாத்தப்பட்ட இந்த செயலமர்வில் வியாபார ஸ்தாபன பதிவு முறைகள்,நிதி முகாமைத்துவம்,வரிசெலுத்துகை,தொழில் விரிவாக்கம்,நிதிவசதியினை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பில் கருத்துகள் இங்கு பரிமாறப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கே.குகதாஸ் தெரிவித்தார்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து 60க்கும்மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் கலந்துகொண்டனர்.