தன்னைப்பற்றி அவதூறாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது –முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் மறுப்பு

புலம் பெயர்ந்த மற்றும் ஒரு சிலரால் வெளியிடப்படும் தன்னைப்பற்றிய அவதூறான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்பதுடன், இவற்றை மக்கள் நம்பிவிடக்கூடாது, அதே நேரம் இவ்வாறன பிழையான தகவல்கள் வெளியிடப்படுவது மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகவே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரனின் செயலாளர் பொன் ரவீந்திரன் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், தேசிய நல்லிணன்ன ஒருமைப்பாட்டு அமைச்சருமான வி.முரளிதரன்(கருணா) தன்னைப்பற்றி வெளியிடப்பட்டு வரும் பிழையான தகவல்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் மீது சேறு பூசும் வகையில் சுமத்தப்பட்டுவரும் அரசியல் சூழ்ச்சின் வெளிப்பாடாக அவதூறான முறையில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்த விதமான உண்மைத் தன்மையும் இல்லை.

நேற்றைய தினம் கருணா அம்மான் கொழும்பில் தாக்கப்பட்டார் என்றும், மனித உரிமைப்பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். என்றெல்லாம் பல்வேறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

இவ்வாறன தகவல்கள் வெளியிடப்படுவதனால் மக்களுக்குள் குழுப்பங்களை ஏற்படுத்தி என்னுடைய அரசியல் செயற்பாடுகளை  குழப்புகின்றதாகவே இருக்கின்றன. இவ்வாறான தகவல்களை நம்பி மக்கள் கலக்கமடையத்தேவையில்லை.

தமிழ் மக்களின் சமாதானத்திற்காகவே நான் அரசியலில் செயற்பட்டு வருகிறேன். இந்த செயற்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கும். சிறிலங்கா சதந்திரக்கட்சியானது ஒரு தேசிய அளவிலான கட்சியாகும். அக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகையில் சுதந்திரக்கட்சிப்பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் நான் தொடர்ந்தும் உப தலைவராகவே இருந்து வருகிறேன் என்றும் விமுரளிதரன் தெரிவித்தார்.

அரசியல் என்பது பொது நலன் சார்ந்தது என்ற வகையில் மக்களுக்கான எனது பணியைத் தொடர்ந்த வண்ணமே இருப்பேன். கடந்த மாதம் 28ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்சன யாப்பாவால் எனக்கான உப தலைவர் நியமனக்கடிதம் வங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தகவல்கள் சரியாகக் கிடைக்காத சிலர் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான பிழையான உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களும், ஆதரவாளர்களும் நம்பிவிட வேண்டாம். என்பதுடன் உண்மைகளை ஆராயும் தன்மையுடனும் செயற்படுதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதே நேரம், தொடர்ச்சியாகவும், 2 வாராங்களுக்கு ஒருதடவை பிழையான பிற்போக்குத் தனமான தகவல்களை வெளியிடுவதில் மிகவும் கவனமாகச் செயற்படும் புலம்பெயர்ந்துள்ளமற்றும் ஒரு சில தரப்பினர் பிழியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்தமாதத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உப தலைவர் அவர்களே என்று விழிக்கப்பட்டுள்ளது. இது இதுவரையில் தொடர்ச்சியாகவும் பாராளுமுன்ற ஊற்பிபினர் வி.முரளிதரன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.