இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய பிரதமர் மோடி அவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வருகைதராதது கிழக்கு மாகாண மக்களுக்கு வேதனையினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டியானது பாடசாலை அதிபர் சா.பரமானந்தம் தலமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம், உறுப்பினர்களான மா.நடராசா. பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மற்றும்
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.புள்ளைநாயகம், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்கள் உடற்திறன் கண்காட்சியும் நடைபெற்றது.
அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் இறுதிப்பரிசளிப்பு நிகழ்வு கடுமை மழை காரணமாக கைவிடப்பட்டது.