மட்டக்களப்பில் வட்டார எல்லைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கச் சந்தர்ப்பம்

உள்ளுராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயம் செய்யும் தேசியக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய இறுதி நகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
இந்த அறிக்கை தொடர்பான கருத்துக்களை பொதுமக்கள் வழங்குவதற்கான அறிவிப்பு மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான கருத்துக்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் வழங்க முடியும். அத் திகதிக்குப் பின்னர் வழங்கப்படும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
அரசாங்க நிருவாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள் ளஇந் நகலினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் பார்வையிட முடியும்.