மட்டக்களப்பு கல்லடி உட்போடையில் அமைந்துள்ள சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த 1ம் திகதி பங்குனி மாதம் 2015 ம் ஆண்டு அன்று காலை 9.30 மணிக்கு சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் வித்தியாலய அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் இடைக்கால தலைவருமாக இருந்த கே.மனோராஐ; தலைமையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தா ஜீ ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட ஆசியுரை ஆற்றினார.; அதனை தொடர்ந்து வித்தியாலய அதிபர் அவர்களினால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.
இலங்கையின் பல பாகங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களில் வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள் என பல்வகை வயதுப் பிரிவினர் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும்.
விசேட பொதுக்கூட்டத்தில் சீர் திருத்தப்பட்ட யாப்பின் முக்கிய விடயங்கள் பற்றியும்இ நடைமுறையில் இருந்த யாப்பு, சீர்திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தியதோடுஇ சீர்திருத்தப்பட்ட யாப்பின் செயன்முறை, படிமுறை விளக்கத்தினை திரு.மு.முருகவேள் அவர்கள் சிறப்பான முறையில் சபையில் முன்வைத்தார். விசேடபொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பு அனைவரினதும் ஏகோபித்த ஆதரவுடன் சிறு மாற்றங்களோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது,
இவ் சீர்திருத்தப்பட்ட யாப்பின் செயன்முறை படி முறைகளுக்கு பல இளைஞர்கள் முன்னின்று உழைத்ததோடு இராமகிருஷ்ண மிஷன் துறவிகள், சிவானந்த வித்தியாலயம் ஈன்ற புத்தி ஜீவிகள், கடந்த வருட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், இளைய சிவாநந்தியன்கள் என பல்வகை தரப்பினர்களின் ஆலோசனைகளும் கருத்துக்களும் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சீர்திருத்தம் செய்யப்பட்ட யாப்பிற்கமைய புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இறுதியாக பாடசாலை கீதத்துடன் இனிதே நிகழ்வு நிறைவடைந்தது.
2015 ஆம் ஆண்டுக்கான சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்க புதிய நிருவா சபை உத்தியோகத்தர்களில், தலைவர்வைத்தியக்கலாநிதி கே.ரி.சுந்தரேசன், உப தலைவர்எஸ்.எம்.இப்ரா லெப்பை, உப தலைவர்எஸ்.சிறிதரன், செயலாளர்என்.தினேஸ்குமார், உப செயலாளர்ரி..பிரதீபன், பொருளாளர் இ.முகுந்தன் ஆகியோரும் பதவி வழி உறுப்பினராக பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ்ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
போசகராக ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தா ஜீ, ஆலோசகர்களாக வைத்தியக் கலாநிதி வி. .விவேகானந்தராஜா, சீ.புண்ணியமூர்த்தி, ஜீ.பாஸ்கரன், கே.கணேசானந்தம்ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதே நேரம், ஒழுங்கிணைப்பு செயலாளர்கள் கல்வி - கே.ஹரிகரராஜ், விளையாட்டு - கே.நிலக்சன, சமூக,கலாச்சாரம் மற்றும் சமயம்- த. மலர்ச்செல்வன், நிதி சேகரிப்பு - வி.அரவிந்தன், சர்வதேச தொடர்பு- எம்.தனிகைசெல்வன், உட்கட்டுமானம் எம். மங்களேஸ்வரன், ஊடகம் மற்றும் பதிப்பாளர் ஜீ.கிரீசன் ஆகியோர் தெரிவாகினர்.
அத்துடன், நிருவாக குழு உறுப்பினர்களாக எஸ்.சந்இதிரகுமார், எஸ். ரவீந்திரன், திருமதிரி. ஹரிதாஸ், எஸ்.அகிலேஸ்வரன், ஜீமுரளிதரன், வி.ஜெகநாதன், திருமதி.ஜே.கலேங்கேஸ்வரன்ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.