கோட்டைக்கல்லாறில் தேசிய அனர்த்த ஒத்திகை நிகழ்வு

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் தேசிய அனர்த்த ஒத்திகை நிகழ்வு நாடளாவிய ரீதியில் கரையோர மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.


இன்று பிற்பகல் 3.30மணியளவில் கரையோர மாவட்டங்களில் உள்ள பிரதான அனர்த்த எச்சரிக்கை கோபுரத்துக்கு அருகில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் பாதுகாப:பு தரப்பினரும் இணைந்து இந்த தேசிய நிகழ்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேசிய நிகழ்வு கோட்டைக்கல்லாறில் இன்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்வில் படை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள்,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் டாக்டர் செல்வி வி.ஜனனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அவ்வாறான அனர்த்தம் ஏற்படும்போது எவ்வாறு அதில் இருந்து காத்துக்கொள்வது சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முறைகள் போன்ற பயிற்சிகள் ஒத்திகையாக நடாத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் பங்குகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.