பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நேற்று பிற்பகல் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வ.முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப்போட்டியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்,மட்டக்களப்பு கல்வி வலய தொழில்வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.ஜெயநாதன்,ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் இருதயநாதன் உட்பட பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றது.

மருதம்,முல்லை,நெய்தல் ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டதுடன் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் நெய்தல் இல்லம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

மாலை வரை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.