கடந்த 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமானது.
ஆலயத்தில் தினமும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுவந்ததுடன் சொற்பொழிவுகளும் நடைபெற்றுவந்தன.
நேற்று சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றதுடன் விசேட பூஜையும் நடைபெற்றது.
இன்று காலை விசேட திருவிழா கூட்டுத்திருப்பலி இலங்கை,பாகிஸ்தான் நாட்டுக்கான யேசுசபை மேலாளர் அருட்பணி பிரான்சிஸ் ஜெயராஜ் இராசையா தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தின் பங்குத்தந்தை அகில்ராஜ் அவர்களினால் கொடியேற்றம் செய்யப்பட்ட இடத்தில் மாதாவின் ஆசிர்வாதம் வழங்கப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்டது.
இந்த உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.