கிழக்கு மாகாணசபை விவகாரம் -நாளை அவசரமாக கூடுகிறது ரி.எம்.வி.பி.செயற்குழு கூட்டம் - முக்கிய தீர்மானம் எடுக்கப்படும்

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தினைப்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் முடிவு ஒன்றை மேற்கொள்ளும் வகையில் விசேட கூட்டம் ஒன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை கூட்டவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


இது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி ஆட்சியமைத்துள்ளதை தொடர்ந்து தமிழ் மக்களின் மத்தியல் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தமது ஆதரவினை தெரிவித்துவந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் விசேட செயற்குழுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன் அதன்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டிய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.