(மா.சசிகுமார்)
கன்னன்குடாவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிறந்த சமூக சேவையாளரும் ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளருமாகிய கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (அகில இலங்கை சமாதான நீதவான்) இன்று (2015.02.21) சனிக் கிழமை அதிகாலை காலமானார்.
ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளரும், கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீச்சர முன்னாள் வண்ணக்கரும் பொருளாளரும், மட்டக்களப்பு-அம்பாரை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவரும், ஈச்சந்தீவு-கன்னன்குடா ப.நோ.கூ.சங்கத்தின் முன்னாள் தலைவரும்,விபுலம் நூல் வெளியீட்டகத்தின் நிறுவனரும்,மட்டக்களப்பு விபுலாநந்தா வெளிவாரி பட்டப்படிப்புக்கள் கல்லூரி ஸ்தாபகருமாகிய இவர் கல்வி,சமூக,அரசியல்,பொருளாதாரம்,கலை இலக்கியம்,சமயம் என பரந்துபட்ட சேவையாற்றி வந்த நிலையில் அண்மைக் காலமாக சுகயினமுற்றிருந்து இன்று காலமானார்.
சிறந்த சமூக சேவையாளரான இவர் விபுலாநந்தா வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் கல்லூரியை ஆரம்பித்து அதனுடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றிய இவர் விபுலம் நூல் வெளியீட்டகத்தினுடாக இலக்கிய வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்புச் செய்ததுடன் கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரம் ஊடாக மாகோன் வகுத்த அரஊழியத்தினையும்,இந்துக்களின் பாரம்பரியங்களையும், மரபுகளையும்,வளக்காறுகளையும் பேணிப்பாதுகாப்பதில் இவர் அளப்பரிய பணியாற்றியதுடன் மட்டக்களப்பு-அம்பாரை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினுடாக இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் அதனுமாக இந்து மத வளர்ச்சிக்கும் பணியாற்றியுள்ளார்.
தூர்ந்து போன தமிழர்களின் பாரம்பரிய கலையான கூத்துக் கலைக்கு புத்துயிருட்டுவதில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண் கலைத்துறையுடன் இணைந்து இவர் ஆற்றிய பணியினால் இன்று இக் கூத்துக் கலையானது புத்துயிர் பெற்றுக் காணப்படுவதுடன் இக் கலையில் இளைஞர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் காணப்படுகின்ற பெருமையும் இவரையே சாரும்.ஏனைய கிராமியக் கலை வளர்ச்சிக்கும் இவர் ஆற்றிய பங்களிப்பு மிகையாகாது.
விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட இவர் விவசாய பொருளாதார வளர்ச்சிக்கும் தன்னால் ஆன பங்களிப்பைச் செய்ததுடன் வங்கி முகாமையாளராக இருந்த காலத்தில் சிறிய நடுத்தர வியாபாரிகளின் வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்புச் செய்து மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்துள்ளார்.
இவ்வாறான பல்வேறுபட்ட சேவைகளை அற்றி வந்த இவரின் இளப்பு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஏற்பட்ட பேரிளப்பாகவே இலக்கியவாதிகளாலும் பத்தியீவிகளாலும் கருதப்படுகின்றது.
அன்னாரின் பூதவுடல் இல:7,ஞானசூரியம் சதுக்கம்,மட்டக்களப்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 2.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று,அதனைத் தொடர்ந்து நல்லடக்கத்திற்காக கன்னன்குடாவில் உள்ள அன்னாரின் குடும்ப மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.