கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் இதுவரை நடைபெற்ற அனைத்துப்போட்டிகளின் அடிப்படையில் அவபாமியா இல்லம் முதலிடத்தினைப்பெற்றுள்ளது.


கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் தொடர்ச்சியான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுவந்ததுடன் இறுதிப்போட்டிகள் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன்,மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,பிரதி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், ஏ.ஐ.ஏ.இன்சுரன்ஸ் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் வை.லக்ஸ்மிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அணிவகுப்பு மரியாதை,விசேடமாக 125 மாணவர்கள் கலந்துகொண்ட மாபெரும் உடற்பயிற்சி கண்காட்சி என்பன நடைபெற்றது.

இறுதியாக அதிதிகள் உரைகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வெற்றிக்கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன.