மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உயர்தரம் கல்வி பயிலும் இந்து மாணவர்கள் மற்றும் இந்து இளைஞர்கள்,அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ இருநாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை(21) காலை ஆரம்பமானது.


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
ஆன்மீக ரீதியில் சமூகத்தில் தலைமை தாங்குவதன் மூலம் சிறந்த சமூக கட்டமைப்பினை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி செயமர்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பல்வேறு தலைப்பில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆன்மீக தலைவர்களினாலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.