மட்டக்களப்பு,செல்வநாயகம் வீதியில் 3ஆம் குறுக்கு வீதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன்,மனைவி இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அதேவேளை கணவன் வெளியில் சென்றிருந்தவேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று போதல்கள் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வீட்டின் முன்பகுதியில் சிறிய சேதகம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் கணவன் மனைவியான தேவகி மற்றும் மகேந்திரன் ஆகியோரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.