நுண்கலைத்துறை வருடா வருடம் வெப்ரவரி 21 இல் 'சர்வதேச தாய்மொழி தினத்தினை' கொண்டாடி வருகின்றமை வழமை, இம்முறை வழக்கிழந்து போகும் மொழிகள் தொடர்பான உரையாடல்களை நடத்தும் நோக்கில் கிழக்குப் பிராந்தியத்தில் வழக்கிலுள்ள பறங்கியர் சமூகத்தினர் பேசும் மொழி தொடர்பிலும், அலிகம்பை குறவர் சமூகத்தினர் பேசும் தெலுங்கு மொழி தொடர்பாகவும் ஆக்கபூர்வமான உரையாடல்களை நிகழ்த்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த வகையில் இவ்வருடமும் பறங்கியர் சமூகத்தில் பேச்சு வழக்கில் உள்ள போத்துக்கீஸ் மொழியினைப் பேசுகின்ற சிலரையும், தெலுங்கு மொழி பேசக்கூடியவர்களையும் சிறப்பு உரைஞர்களாக அழைத்து இன்று சனிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 1.00 வரையும் இந்நிகழ்ச்சி நுண்கலைத்துறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் தலைமையில் விரிவுரையாளர் சு.சந்திரகுமார் அவர்களின் பொறுப்பில் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளாரும், அருட்தந்தை இருதயராஜ் அடிகளாரும் (இவர் தெலுக்கை தாய் மொழியாகக் கொண்டவர்) அலிகம்பையைச் சேர்ந்த ஆறு சிறுவர்களும் தெலுங்கு மொழி தொடர்பாக உரையாடி மகிழ்ந்து கொண்டாடினர்.
அவ்வாறே பறங்கியர் சமூகத்தின் மத்தியில் பேச்சு வழக்கில் உள்ள ஒல்லாந்து மொழியின் சிறப்புப் பற்றியும் அது பேசப்பசுவது தொடர்பாகவும் நியுட்டன் செல்லர், எஸ்.ரி. ஒக்கஸ், அஞ்சலோ ஒற்றஸ், பகின் மரியோ வல்ரசார் ஆகியோர் இணைந்து உரையாடி, பாடல்களைப் பாடிக்காட்டினர்.
பல்வகை மொழிகளின் இருப்பிற்கான தேவைகள் குறித்து ஆக்கபூர்வமான உரையாடல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.