மட்டக்களப்பில் சிவராத்திரியை அனுஸ்டித்த ஜப்பான் இளைஞர் யுவதிகள்

சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் தான்தோறீச்சரங்களில் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்திற:கு ஜப்பான் நாட்டில் இருந்து வருகைதந்த பெருமளவான இளைஞர் யுவதிகளும் சிவராத்திரி தின நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.


உலகளாவிய இளைஞர் தலைமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்ற  நிகழ்ச்சிதிட்டத்துக்கு அமைய, புரிந்;துணர்வு மற்றும் மனிதநேய நடைமுறைகளை ஊக்குவிக்கும் 'நிப்பொண்மாரு - நல்லெண்ண உலக சுற்றுலா'   என்பதற்கு ஏற்ப  இவருகை தந்தவர்;களே இந்த உறசவத்தில் கலந்துகொண்டு கலாசார பரிமாற்றங்களை செய்தனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கே.தவராஜாவின் மேற்பார்வையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாழிகாட்டலுடன் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கலாசார பரிமாற்றுத்திட்டத்தின் கீழ் இவர்கள் தான்தோன்றீஸ்வரத்துக்கு வருகைதந்தனர்.

ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட இவர்கள் அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடி பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர்.