காத்தான்குடிக்கு விற்பனைக்காககொண்டுவரப்பட்ட கடத்தல் வான் மீட்பு –யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட வேன் ஒன்றை போலியான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட யாழ்குடாவை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி  பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.


யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த குலேந்திரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் 56-5647 என்ற வேனைக்கடத்தி அதன் எஞ்ஜின் இலக்கம் மற்றும் வர்ணத்தையும் மாற்றி காத்தான்குடிக்கு எடுத்துவந்து வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயன்றுன்றுள்ளார்.

குறித்த வேன் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் பேரில் விசேட பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெரத தெரிவித்தார்.

சந்தேகநபர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.