நாவலடி காயத்திரி பீடத்தில் சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வு

மட்டக்களப்பு நாவலடி  காயத்திரி பீடத்தில் சிவராத்திரி தினத்தில் “மகா யாகம்”; “சப்தரிசிக்களுக்கும்”“பசுபதி”லிங்கத்திற்கும் அபிஸேக ஆராதனை சமயச் சொற்பொழிவு,திருவாசகமுற்றோதல் என பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெற்றுச்செல்லுமாறும் நாவலடி  காயத்திரி பீடத்தின் பிரதம குரு சிவயோகச் செல்வர், கதம்பவாரிதி சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


காயத்திரிபீடத்தில்,சிவராத்திரி தினத்தில் இடம்பெற இருக்கும் ஆன்மீகநிகழ்வுகள் பற்றிபக்தர்களுக்குவிளக்கிக் கூறுவதற்கான கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டுபக்தர்களுக்குவிளக்குகையில் பிரதமகுரு இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாவலடிகாயத்திபீடத்தில் சிவராத்திரி தினத்தன்று பெப்ரவரி 17ல் மகாயாகம்,சப்தரிஸிகளுக்கும், பசுபதிலிங்கத்திற்கும் புனித தீர்த்தங்களால் அபிசேகம், ஆராதனைகள், சமயச்சொற்பொழிவு, திருவாசகமுற்றோதல் என்பன இடம் பெறும். இதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. விரதகாரர் ஒவ்வொருவரும் தனித்தனியாக குண்டம் ஸ்தாபித்துயாகம் செய்யவேண்டும். அத்தோடுதத்தம் கரங்களாலேயேலிங்கத்திற்கும் சப்தரிசிகளுக்கும் புனிததீர்த்தங்களால் அபிசேகம் செய்யவேண்டும்.

காயத்திரிசித்தர்சுவாமிமுருகேசுஅவர்களே காயத்ரி பீடத்தையும்,சப்தரிசி வளாகத்தினையும் ஸ்தாபித்தவர்,சப்தரிசிகளுக்கான வணக்கஸ்தலம் இதைத்தவி ரஉலகில் வேறெங்கும் இல்லை. அவருடைய ஆன்மீகபலம், அறிவு,ஆற்றல்,சித்துக்கள் என்பவற்றை அளந்து பார்க்க யாராலும் முடியாது. அவர் இப்போதும் எங்களை சூட்சுமாக வழி நடத்துகிறார்.

அவர்காட்டிய வழிமுறைகளைத்தான் யாகம் செய்வதிலும்,அபிசேகங்களிலும்,வழிபாடுகளிலும் கடைபிடித்துவருகிறோம். சப்தரிசிக்கள் இங்கேசூக்சுமாகநடமாடுகிறார்கள்.

பக்தியோடு பூசிப்பவர்களுக்கு கனவிலும்,நனவிலும் காட்சிகொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்கள். அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் போக்குகிறார்கள். இங்கே நடைபெறும் இவ்வாறான ஆன்மிகநிகழ்வுகள் அவர்களை ஈர்க்கும் என்பதை பக்தர்கள் தெளிவாக புரிந்துகொள்ளல் வேண்டும்.

“யாகம்”என்பது தேவதைகளை கூவியழைப்பதாகும் ஒவ்வொருபக்தனும் பக்தியோடுயாகம் செய்யும் போது“யாககுண்டத்தில்”அந்தத் தேவதைதோன்றிஅப்பக்தனின் வேண்டுதலைநிறைவேற்றும், இது சுவாமி முருகேசுவின் தேவவாக்கு, இதே போன்று புனிததீர்த்தங்களால் பசுபதிலிங்கத்திற்கும் சப்தரிசிகளுக்கும் அபிN~கம் செய்யும்; போதும் அத்தேவதைகள் அருள் மழைபொழியும். புனிததீர்த்தங்கள் கங்கா, ஜமுனா,சிந்து,காவேரி,சரஸ்வதி,துங்கபத்ரா,வைகை,கோதாவாரி,என்பனசாமானியமானவையல்லசக்திநிறைந்தவைகள். பக்தர்கள் தங்கள் கரங்களால் அபிN~கம் செய்யும்போதுஅவர்கள் அத்தேவைகளின் அருளாசிக்குஉட்படுவார்கள்.

சிவராத்திரிதினத்தில் இவ்வாறு பக்தர்களை ஆன்மிக நிகழ்வில் நேரடியாக உள்வாங்குவதற்கான நோக்கமே அதுதான்.

“யாகம்”செய்யும் போதுபக்தர்களால் ஒதப்படும் மந்திரங்களும் “உபாம்சம்”உபாம்சுவாம்”மானசீகம் ஆகிய விதிப்படி ஒதப்படல்வேண்டும் யாகத்திற்குரிய திரவியங்களையும், புஸ்பங்களையும்,“ஆகுதி”ப் பொருட்களையும் யாகம் செய்வோர்தனித் தனியாக குறைவின்றிகொண்டுவருதல் வேண்டும். எமது வளாகத்தில் நல்ல அனுபவம் பெற்றபக்தர்கள் யாகம் செய்யும் பக்தர்களுக்கு உதவுவார்கள்,ஆதலால் அவர்கள் நேரகாலத்தோடுவரவேண்டும்.

இதைவிட சிவராத்திரி பகற்பொழுதில் திருவாசகமுற்றோதல் இடம் பெறும் மட்டு-மாவட்டசைவத் திருநெறிமன்றம் இதைநாடாத்தும்

இத்தோடு“சுவாமி வேதாந்தஆனந்த h”அவர்களுடைய“யோகசக்கரங்கள்”என்ற தலைப்பிலான சமயச்சொற்பொழிவும் இடம்பெறும். இது வி~யஞானம் நிறைந்தாய் இருக்கும். பக்தர்களுக்குஅருளும் வலுவும் சேர்க்கும் இறுதிநிகழ்வா கசமுத்திரா தீர்த்தம் இடம்பெறும்,

ஆகையால் அன்றைய நிகழ்வு முழுவதும் சிவராத்திரிக்குஅர்ப்பணம் செய்யப்பட்டதாகவே இருக்கும் இந்நிகழ்வுகளில் அனைவரும் உடலாலும்,உள்ளத்தாலும்,உணர்;வாலும் கலந்து இறைஐக்கியம் பெறவேண்டும்; என்றார்.