மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொற்தொழிலாளர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூ;ட்டுறவு சங்கமானது இதுவரை காலமும் ஒரு அலுவலகம் இல்லாத நிலையில் வீடுகளிலேயே இயங்கிவந்தது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் பொதுச்சந்தையில் அதற்கான இடம் வழங்கப்பட்டு அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூ;ட்டுறவு சங்கத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூ;ட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான சபாபதி குருகுலசிங்கம் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக பிரபல எழுத்தாளர் பூ.மா.செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூ;ட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள்,பொற்தொழிலாளர்கள்,விஸ்வப்பிரம்மகுல மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் பொற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கு சேவையாற்றும் வகையில் இந்த அலுவலகம் செயற்படும் என விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூ;ட்டுறவு சங்கத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.