மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் ஆரம்ப பிரிவுகளில் நூலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.


செலான்வங்கியின் கூட்டுறவு சமூக சேவைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 100 ஆரம்ப பிரிவு பொதுநூலகத்தினை திறக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆரம்ப பிரிவு பொதுநூலகங்கள் பாடசாலைகளில் திறக்கப்பட்டுவருகின்றன.

கடந்த வருடம் முதலாவது ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பொதுநூலகம் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் திறக்கப்பட்ட நிலையில் இந்த வரும் முதலாவது ஆரம்ப பிரிவு பொதுநூலகம் இன்று காலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் திறந்துவைக்கப்பட்டது.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்;.பி.நிமல்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செலான் வங்கியின் உதவி பொதுமுகாமையாளர் ரஞ்சன் பத்மநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானம் முத்துகீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செலான்வங்கியின் முகாமையாளர் திருமதி பத்மஸ்ரீ இலங்கோவின் முழு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் பொதுநூலகத்துக்கு தேவையான புத்தகங்கள் ஒரு தொகுதியும் இதன்போது கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள்,வங்கியின் ஊழியர்கள்,ஏனைய பாடசாலையின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.