நேற்று வெள்ளிக்கிழமை மாலை தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் இருந்து மாதாவின் திருச்சொரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்டினால் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் கொடியேற்றமும் நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்றதுடன் இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்களும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 14ஆம் திகதி ஆலயத்தின் திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளதுடன் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் கொடியிறக்கல் நிகழ்வு நடைபெறும்.
இந்த திருவிழா கூட்டுத்திருப்பலி இலங்கை,பாகிஸ்தான் நாட்டுக்கான யேசுசபை மேலாளர் அருட்பணி பிரான்சிஸ் ஜெயராஜ் இராசையா தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.