புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடந்த மெய்வல்லுனர் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடந்த மெய்வல்லுனர் போட்டி இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


புதுக்குடியிருப்பு பொதுவிளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் வே.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாக கோவிந்தன் கருணாகரம்(ஜனா)பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக மண்முனைப்பற்று கோட்ட முன்னாள் கோட்டக்கல்விபணிப்பாளர் வே.கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் இதன்போது பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

அத்துடன் உடற் பயிற்சிக்கண்காட்சி,வினோத உடைப்போட்டி,பழைய மாணவர்களுக்கான நிகழ்வு,பெற்றோருக்கான நிகழ்வு என்பன நடைபெற்றன.
மலைமகள் இல்லம்,கலைமகள் இல்லம்,திருமகள் இல்லம் என மூன்று இல்லங்காக பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட இந்த மெய்வல்லுனர் போட்டியில் மலைமகள் இல்லம் 642 புள்ளிகளைப்பெற்று இந்த ஆண்டின் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

கலைமகள் இல்லம் 569 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும் திருமகள் இல்லம் 513 புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் வெற்றிக்கிண்ணங்கள் சம்பியன் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.