மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிஷனில் இராமகிருஷ்ணரின் 180வது ஜெயந்தி தின விழா

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 180வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிஷனில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது.


இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜாந்தர் மகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மிஷனிலிருந்து ஊர்வலமாக சென்ற இவர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, நொச்சிமுனை வீதி, பழைய கல்முனை வீதி, கல்லடி மணிக்கூட்டக் கோபுரம் வழியாக மிஷனை வந்தடைந்தது.

மங்களாரதி, கொடியேற்றம், பூஜை, அகண்டநாம பஜனை, ஆரதி என்பன இடம்பெற்று சுவாமியினால் ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.