ஆரையம்பதியில் அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயம் பன்னெடுங்காலமாக சைவ மக்களால் தமிழ் மரபுவழியாக பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகின. இதன்போது ஆசாரிய வர்ணம்,முகூர்த்த நிர்ணயம்,மஹா கணபதிகோமம் என்பன நடாத்தப்பட்டது.
நேற்று சனிக்கிழமை காலை சக்தி புண்ணியாகம்,விநாயகர் பூஜை நடைபெற்று அடியார்கள் பால்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மஹா கும்பாபிசேகமானது சிவஸ்ரீ உ.ஜெயதீஸ்வர சர்மாவின் ஒழுங்கமைப்பில் சிவாச்சாரிய திலகம்,சிவஞானபாஸ்கரன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியரினால் நாடத்தப்பட்டது.
இன்று காலை ஞாயிற்றுக்கிழமை காலை புண்ணியாகவாசனம்,மஹா பூர்ணாகுதி,தீபாராதனை அர்ச்சனை,புஸ்பாஞ்சலி,மஹா யாகம் என்பன நடைபெற்றன.
இதன்போது ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள விசேட பந்தலில் வைக்கப்பட்டிந்த விசேட கும்பத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அடியார்களில் ஆரோகரா கோசத்துடன் மேளவாத்தியங்கள்,மந்திர உச்சாடனங்கள் முழங்க மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தின் பரிபால தெய்வங்களுக்கும் கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் பிரதான கும்பம் அடியார்கள் மலர் தூப ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
அபிசேகத்தினை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் மங்கள தசதர்சனம்,கர்மா அபிசேகம் என்பன நடைபெற்றன.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார்.