மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயத்தின் திருப்பாவை திருக்கல்யாண நிகழ்வு

திருப்பாவை விரதத்தின் இறுதி நாளான நேற்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த மாதம் 16ஆம் திகதி விஸ்ணு ஆலயங்களில் இந்த திருப்பாவை நிகழ்வு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவந்தது.

இதன்கீழ் மட்டக்களப்பு,மயிலம்பாவெளி காமாட்சிஅ ம்மன் ஆலயத்தில் திருப்பாவின் இறுதி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இன்று இரவு திருப்பாவையின் இறுதி நிகழ்வான மகா விஸ்ணுவுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான திருக்கல்யாண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

சிறப்பு பூஜையினை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஆண்டாள் மற்றும் மகா விஸ்ணுவின் திருவுருவத்திற்கு இந்த திருக்கல்யாண நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.

மகா விஸ்ணுவை கணவனாக அடையவேண்டி ஆண்டாளினால் விரதம் அனுஸ்டிக்கப்பட்டு இறுதியில் விரதம் பூர்த்திசெய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.