வீரமுனையில் களைகட்டிய தைத்திருநாள் நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் வழிபாடுகள்
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாள் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.


விசேடமாக அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் பொங்கல் பொங்கப்பட்டு இந்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் வீரமுனை பிரதேசத்தினை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.