மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் வழிபாடுகள்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தைத்திருநாளை உலகெங்கும் உள்ள இந்துக்கள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.


தைத்திருநாளை முன்னிட்டு இந்து ஆலங்களில் விசேட பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் தைத்திருநாள் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் வழிபாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த வழிபாட்டின்போது புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆசிவேண்டி விசேட பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

இந்த வழிபாடுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன் தைத்திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.