தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட பெரியகல்லாறு கல்லாறு விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கல்லாறு விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் நாகராஜா கலந்துகொண்டு மரதன் ஓட்ட நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.
இந்த மரதன் ஓட்டத்தில் பெரியகல்லாறினை சேர்ந்த அஜந்தன் முதல் இடத்தினையும் சதீஸ் இரண்டாம் இடத்தினையும் தனுஜன் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
தைத்திருநாளை முன்னிட்டு கல்லாறு விளையாட்டுக்கழகம் தொடர்ச்சியாக இந்த விளையாட்டு நிகழ்வினை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.