கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட நிர்வாகப்பகுதி திறந்துவைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட நிர்வாகப்பகுதி இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அதிபரின் அறை உட்பட நிர்வாகப்பகுதியின் மிக பழைமையான பகுதிக்கான நிதியொதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வழங்கியிருந்தார்.

கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு உதவிகளை கடந்த காலத்தில் வழங்கியுள்ளதாப அதிபர் தெரிவித்தார்.