கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் இப்பொங்கலை உரிய இந்துகலாசார முறைப்படி எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பில் கோமாதா பொங்கல் விழாவை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடிப் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள குருக்கள்மடத்தில்; நடத்தியது.
குருக்கள்மடத்திலுள்ள மாட்டுப்பட்டி மாட்டுத் தொழுவத்தில் கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
கோமாதா பூஜையும் பட்டிப்பொங்கலும் சடங்கும் இந்துசமயகலாசார முறைப்படி எவ்வாறு கொண்டாடப்படவேண்டும் என்பது தொடர்பில் கிழக்கிலங்கையின் பிரபல இந்துசமய விற்பன்னர் விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உட்பட பெருமளவான பொதுமக்கள்,மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.