“முத்துவிநாயகர் வித்தகம்”நூலாசிரியரும் பிரபல ஆன்மீகவாதியுமான அருட்கவியரசு கண்மணிதாசன் வை.எஸ்.காந்தன் குருக்களினால் பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் முழு உதவியுடன் இந்த நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்துசமய வரலாற்றில் முதன்முறையாக தமிழில் கும்பாபிசேகம் நடத்தப்பட்ட ஆலயமாக பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயம் விளங்கிவரும் நிலையில் அதன் பெருமையினையும் விஸ்வகுல மக்களின் பெருமையினையும் வெளிக்கொணரும் வகையில் இந்த நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளரும் சமூக சேவையாளருமான கலாபூசணம் பூ.மா.செல்லத்துரையின் முன்னிலை உரையுடன் ஆரம்பமான இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ;.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக சம்மாந்துரை நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.கருணாகரன்,முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கா.தட்சணாமூர்த்தி,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளான கலந்துகொண்ட ஆன்மீக வாதிகளின் உரைகளும் நூல் வெளியீட்டு உரையினை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சிவம்பாக்கியநாதன் நிகழ்த்தினார்.
நூல் நயவுரையினை அதிபர் க.பிரபாகரன் நிகழ்த்தியதுடன் நுர்லின் ஏற்புரையிரன நூலாசிரியர் அருட்கவியரசு கண்மணிதாசன் வை.எஸ்.காந்தன் குருக்கள் நிகழ்த்தினார்.
நூல் வெளியீடுகள் நடைபெற்றதுடன் நூல் ஆசிரியரும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.