கடல் ஆமை இரைச்சி கொண்டுசென்றவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுதாவளையில் கடல் ஆமையை இறைச்சிக்காக கொன்ற இருவரை பொலிசார் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கைதுசெய்தனர்.


பொலிசாருக்கு கிடைத்த  தகவல் ஒன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இருவரும் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.அத்துடன் கொல்லப்பட்ட கடல்ஆமையையும் பொலிசார் மீட்டதாக தெரிவித்தனர்.