இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயகலகத்துக்குட்பட்ட மாங்காடு பகுதியில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன்,கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் நன்றி தெரிவுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை தொடர்ந்து பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு நடைபெற்றது.