மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுலை பகுதியில் கஞ்சா கொண்டுசென்ற முச்சக்கர வண்டி மீட்கப்பட்டதுடன் பெருமளவான கஞ்சாவும் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோதே இந்த கஞ்சா மீட்கப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது முச்சக்கர வண்டியை செலுத்திச்சென்றவர் மற்றும் பெண்னொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் இருந்து ஐந்து கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.