மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் மாதாந்தம் நடாத்திவரும் யாவரும் பேசலாம் பௌர்ணமி நிகழ்வின் எட்டாவது தொடராக “இலங்கையின் நவீனத்துவமும் கலை வெளிப்பாடும்”என்னும் தலைப்பிலான கருத்தாடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் க.சிவரெத்தினம் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறைகாயாவுள்ள இலக்கியவாதிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் வெளிக்கொணரும் வகையில் மாதாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுவருகின்றது.
இதன்போது வரவேற்புரையினை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் வீ.மைக்கல் கொலின் நிகழ்த்தியதுடன் நிகழ்வினை ஆ.கி.பிரான்சிஸ் தொகுத்துவழங்கினார். இந்த நிகழ்வுக்கு முன்னிலை வகிப்பாளராக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் இலக்கியவாதிகள்,எழுத்தாளர்கள்,தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்;டத்தின் கலை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு மகுடம் கலை இலக்கிய வட்டம் அர்ப்பணிப்புமிக்க பணியை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.