பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் கழக தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் கழகதினம் சிறப்பாக நடைபெற்றது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், மா.நடராஜதா,பிரசன்னா இந்திரகுமார்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக சேவைகள் உட்பட பல சேவைகளை இந்த கழகம் மேற்கொண்டுவருகின்றது.

இந்த வகையில் பெரியகல்லாறில் உள்ளடக்கப்பட்ட சேவைகளை மேற்கொண்டுவந்த குறித்த கழகம் கடந்த ஏழு வருடமாக களுவாஞ்சிகுடி பிரதேசம் முழுவதும் வியாபித்துள்ளது.

இந்த வகையில் வருடாந்தம் கண்கவர் மேடை அலங்காரங்களுடன் இந்த நிகழ்வினை சிறப்பாக நடத்திவருகின்றது.

இந்த நிகழ்வில் சாதணைகள் படைத்த பல்வேறு தரப்பினரும் கௌரவிக்கப்பட்டதுடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 81 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கழகத்துக்கு அற்பணிப்பு வழங்கியோரும் கல்விக்கு அர்ப்பணிப்பு வழங்கியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் இடம்பெற்ற பல கலை நிகழ்வுகள் பார்ப்போரை வெகுவாக கவர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.