மாமாங்கத்தில் வீடு தீக்கிரை –மின்னொழுக்கு என தெரிவிப்பு

(லியோன்)

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.


நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணியளவில் மாமாங்கம் முதலாம் குறுக்கு வீதியில் உள்ள எஸ்.விஸ்வநாதன் என்பவரின் வீடிலேயே இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உள்ளோர் வெளியில் சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும் இதன்போது வீட்டினுள் இருந்து புகைவருவதைக்கண்ட அயலவர்கள் தீயிணை அணைக்கும் நடவடிக்கையினை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.